பிரதமர் மோடிக்கு மெயில் அனுப்பிய 10 வயது சிறுமி…! என்ன அனுப்பினார் தெரியுமா…?

பிரதமர் மோடியை சந்திக்க விரும்பிய 10 வயது சிறுமி அனிஷா, பிரதமர் மோடிக்கு மெயில் அனுப்பியுள்ளார்.
அஹமத்நகர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுஜய் விக் பாட்டீலின் மகளும், மகாராஷ்டிராவின் மூத்த தலைவர் ராதாகிருஷ்ண விக் பாட்டீலின் பேத்தியுமான அனிஷா பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று மிகவும் அவலாக இருந்தார். இதனையடுத்து, அனிஷா பிரதமர் மோடியை சந்திக்க தன்னை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து, பாட்டீல் அவரது குழந்தையிடம், பிரதமர் மோடி பிஸியான மனிதர். அவரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்காமல் போகலாம் என கூறினார். அனிஷா அதை கேட்க மறுத்துள்ளார். இதனையடுத்து, அனிஷா தனது தந்தையின் லேப்டாப்பில் பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பிய மெயிலில், “ஹலோ சார், நான் அனிஷா, நான் உங்களை வந்து சந்திக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். இவர் அனுப்பிய மெயிலுக்கு, பிரதமர் மோடி, “டாட் கே சாலி ஆவ் பீட்டா (தயவுசெய்து விரைந்து வாருங்கள்)” என பதிலளித்துள்ளார். பிரதமர் மோடியின் பதிலை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார் அனிஷா.
இதனையடுத்து, விகே பாட்டீல் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தவுடன், பிரதமர் மோடியின் முதல் கேள்வி, “அனிஷா எங்கே?” என்று தான் கேட்டார். பின் அனிஷா பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது அவர் பிரதமர் மோடியிடம், ‘இது உங்கள் அலுவலகமா? உங்கள் அலுவலகம் எவ்வளவு பெரியது! நீங்கள் நாள் முழுவதும் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்களா?’ என கேள்வி எழுப்பியுள்ளார். சிறுமியின் அத்தனை கேள்விக்கும் பிரதமர் மோடி பொறுமையாக பதிலளித்துள்ளார்.
பின், பிரதமர் மோடி சிறுமியிடம், நான் இன்று உங்களை சந்திக்க வந்துள்ளேன், நான் உங்களுடன் பேச விரும்புகிறேன் என கூறினார். பின் அந்த சிறுமி மோடியிடம், நீங்கள் குஜராத்தைச் சேர்ந்தவர், நீங்கள் எப்போது இந்தியாவின் ஜனாதிபதியாக வருவீர்கள்? என கேட்டுள்ளார். இவரது கேள்வியை கண்டு, பிரதமர் மோடி மற்றும் சுற்றியிருந்தவர்கள் சிரித்தனர்.
10 நிமிட சந்திப்பின் போது, அனிஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் விளையாட்டு, படிப்பு மற்றும் அவர்களின் தனிப்பட்ட ஆர்வங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக விவாதித்தனர்.