அரசுத் தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதாவை நேற்று ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்தால் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யும் மசோதாவை ராஜஸ்தான் அரசு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. ராஜஸ்தான் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கான (REET) வினாத்தாள் கசிவு குறித்து பெரும் பிரச்சனைக்கு பிறகு இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
ராஜஸ்தான் பொதுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிகளைப் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களைத் தடுக்க இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டத்தின் கீழ் ஒரு நபர் பொதுத் தேர்வில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பதிவுசெய்யப்பட்ட, நகலெடுக்கப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பேப்பர் போன்றவற்றை பயன்படுத்தினால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சத்திற்கு குறையாத அபராதம் என்று மசோதா கூறுகிறது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…