அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் பெண் தொழில்முனைவோர்கள் தயாரித்த 10,000 ராக்கிகள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ வீரர்களுக்காக வழங்ப்பட்டது.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண் தொழில்முனைவோர்கள், ராக்கிகளை செய்துள்ளனர். அதில் முக்கியமானவைகளான, டெல்லியில் தயாரிக்கப்பட்ட மோடி ராக்கி, நாக்பூரில் தயாரிக்கப்பட்ட சணல் ராக்கி, ஜெய்ப்பூரில் செய்யப்பட்ட பெயிண்ட் ராக்கி, புனேவில் தயாரிக்கப்பட்ட விதை ராக்கி, சாட்னாவில் தயாரிக்கப்பட்ட கம்பளி ராக்கி, ஜாம்ஷெண்ட்பூரில் பழங்குடியின பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜார்கண்ட் ராக்கி ஆகியவை அடங்கும்.
மேலும், அசாமில் உள்ள டின்சுகியாவில் தயாரிக்கப்பட்ட தேயிலை இலைகள், கொல்கத்தாவில் தேயிலை இலைகளால் செய்யப்பட்ட ராக்கி, கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட பட்டு ராக்கி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) பொதுச்செயலாளர் பிரவீன் காண்டேல்வால் கூறுகையில், ‘ பல்வேறு மாநிலங்களில் உள்ள பெண் தொழில்முனைவோரால் தயாரிக்கப்பட்ட மில்லியன் கணக்கிலான ராக்கிகள், பலவேறு பகுதிகளில் உள்ள வர்த்தக சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்படும்.’ என தெரிவித்தார்.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…