பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பா போன்ற குழுக்களுடன் தொடர்புடைய நபர்களை குறிவைத்து, பயங்கரவாதிகளின் வீடுகள் இடிப்புகளின் எண்ணிக்கையை 10 ஆக உயர்ந்துள்ளது.

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது இந்தியா தனது அடக்குமுறையைத் தீவிரப்படுத்திய நிலையில், பந்திபோரா, புல்வாமா மற்றும் ஷோபியன் மாவட்டங்களில் மூன்று தீவிர பயங்கரவாதிகளின் வீடுகளை அதிகாரிகள் இடித்துள்ளதாக அதிகாரிகள் இன்றைய தினம் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் பயங்கரவாதிகள் 4 பேரின் வீடுகளை குண்டுவைத்து ராணுவம் தகர்த்துள்ளது. இதையும் சேர்த்து இதுவரை மொத்தம் 10 தீவிரவாதிகளின் வீடுகளை ராணுவம் தகர்த்துள்ளது. தாக்கத்தால் நடத்தப்பட்ட அடுத்தடுத்த நாட்களில் 10 உள்ளூர் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்புப் படையினர் இடித்துள்ளனர், மேலும் இந்த நடவடிக்கை தொடர வாய்ப்புள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையில் அடில் குரீ என்றும் அழைக்கப்படும் அடில் உசேன் தோக்கர், அவந்திபோராவில் ஆசிப் ஷேக் மற்றும் புல்வாமாவில் அஹ்சன் ஷேக் ஆகியோரின் வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளன.
#WATCH | Bandipora, J&K: Visuals of a destroyed house in Naz Colony, allegedly linked to a terrorist pic.twitter.com/kMi9GerBgG
— ANI (@ANI) April 27, 2025
அதன்படி, இதுவரை வீடுகள் இடிக்கப்பட்ட பயங்கரவாதிகளில் லஷ்கர்-இ-தொய்பாவின் அடில் ஹுசைன் தோக்கர், ஜாகிர் அகமது கனாய், அமீர் அகமது தார் மற்றும் ஆசிப் ஷேக், ஷாஹித் அகமது குட்டே, அஹ்சன் உல் ஹக் அமீர், ஜெய்ஷ்-இ-முகமதுவின் அமீர் நசீர் வானி, ஜமீல் அகமது ஷேர் கோஜ்ரி, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டின் அட்னான் சஃபி தார் மற்றும் ஃபரூக் அகமது டெட்வா ஆகியோர் அடங்குவர்.