உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு.
உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என கூறி ரத்து செய்ய வழக்கு தொடரப்பட்டது. விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்பி ஆர்எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பாத், திரிவேதி, பார்டிவாலா ஆகியோரை கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர்.
அப்போது, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் முறையை ரத்து செய்ய கோரிய விவகாரத்தில் வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. எந்தெந்த விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்பதை சுருக்கமான வரைவாக தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இந்த வழக்கில் எந்த மாநில அரசு வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ளலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டது.
இதன்பின் வழக்கு மீண்டும் செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கின் நிலை குறித்தும், வழக்கு குறித்தும், எப்போது விசாரணை நடத்தப்படும் என்ற தேதிகள் அன்றைய தினம் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி கள்ளக்குறிச்சி : 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம்…