10 % இட ஒதுக்கீடு மசோதா….அதிமுக M.P தம்பிதுரை வெளிநடப்பு…!!
இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்_ மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா மீது சுமார் 4 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.இதில் மசோதா_மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்பதால் இதில் பங்கேற்க பிரதமர் மோடி கலந்து கொண்டார்.இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிராக அதிமுக மக்களவை உறுப்பினர் தம்பிதுரை எதிர்ப்பு செய்து வெளிநடப்பு செய்தார்.அப்போது இது குறித்து பேசிய மக்களவை அதிமுக M.P தம்பிதுரை கூறுகையில் , பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடானது இடஒதுக்கீடு கொள்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.