பட்ஜெட் தாக்கலின் எதிர்பார்ப்புகள் குறித்த 10 புள்ளிகள்….!

Default Image

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு துறையினருக்கும் இது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படஜெட் தாக்கலின் முக்கியமான 10 புள்ளிகள்.

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 2021 – 22 ஆம் ஆண்டுக்கானமத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு துறையினருக்கும் இது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படஜெட் தாக்கலின் முக்கியமான 10 புள்ளிகள் பின்வருமாறு,

  1. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய பிரதமராக பொறுப்பேற்ற பின் தற்போது 9-ஆவது பட்ஜெட்டை, நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள், மக்களவையில் காலை 11 மணிக்கு  தாக்கல் செய்ய உள்ளார். 2020ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு உறுதியளித்துள்ள நிலையில், இந்த ஆண்டில் 4-5 மினி வரவு செலவுத் திட்டம் குறித்த நடவடிக்கைகளை, தொற்று நோய் பாதிப்புக்கு பின் அறிவிக்கப்படும் திட்டம் என்பதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ளது.

2.நடப்பு நிதி ஆண்டில் 7.7 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கணுக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரலில் தொடங்கும் அடுத்த நிதியாண்டில் 11 சதவீத வளர்ச்சி விகிதத்தின் கணிப்புகளை பூர்த்தி செய்வதற்காக பொருளாதாரத்தில் புதிய திட்டங்களை சீதாராமன் அவர்கள் வெளியிட முடிவு செய்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

3.தொற்றுநோய்க்கு முன்பே பொருளாதார மந்த நிலையில் இருந்த நிலையை 11 ஆண்டுகளில் அது சற்று வளர்ச்சியில் தடுமாறி, கொரோனா நெருக்கடியின்போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு அரசாங்கம் அதிகமாக நிதி வழங்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

4.உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த ஆண்டை விட 15 சதவீதத்திற்கும் அதிகமாக செலவு செய்வது, சராசரி வரி செலுத்துவோரின் கைகளில் அதிக பணம் வைப்பது மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான விதிகளை தளர்த்துவது ஆகியவை இந்த பட்ஜெட்டில் முதலிடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5.வரவிருக்கும் நான்கு ஆண்டுகளில் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதமாக உயர்த்தும் நோக்கத்துடன், அரசாங்கம் சுகாதார செலவினங்களை இரட்டிப்பாக்க வாய்ப்புள்ளது. தொற்றுநோயால் வெளிப்படும் குறைபாடுகளை நாடு சரிசெய்யும் பொருட்டு, இவ்வாறு முடிவு எடுப்பதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

6.ரியல் எஸ்டேட், விமான போக்குவரத்து, சுற்றுலா மற்றும் ஆட்டோ போன்ற துறைகளில் தொற்று நோயால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் நடவடிக்கைகளை நிதியமைச்சர் வெளியிடுவார் என்று கார்ப்பரேட்டுகள் மற்றும் தொழில் துறையில் எதிர்பார்க்கின்றன. நுகர்வோர் உணர்வு அதிகரிப்பதற்கும், பொருளாதார வளர்ச்சியை புதுப்பிப்பதற்கும், சிறு வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கு வரி நிவாரணங்களை வழங்குவதையும் அரசு பரிசீலிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

7.நிதிப்பற்றாக்குறையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை நடப்பு நிதியாண்டில் 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும் என பலர் எதிர்பார்க்கின்றனர்.

8.சமீபத்திய மாதங்களில் வரி வசூலில் முன்னேற்றம், நடப்பு ஆண்டின் குறைந்த அடித்தளத்தின் உதவியும், ஜனவரி ஜிஎஸ்டி வருவாய் சாதனை அளவை எட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார மாற்றமும், பல உயர்தர பொருட்களின் இறக்குமதி வரிகளை உயர்த்துவதும் குறித்த திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9.எரிசக்தி, சுரங்க மற்றும் வங்கி ஆகியவற்றில் மொத்தம் நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவதிலிருந்தும் ஆயுள் காப்பீட்டு கழகம் போன்ற பெரிய நிறுவனங்களின் சிறுபான்மை பங்குகளை விற்பனை செய்வதில் இருந்தும் அரசாங்கம் நிதி திரட்ட வாய்ப்புள்ளது. ஒரு புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கி உருவாக்குதல் மற்றும்  மோசமான நிலையில் உள்ள வங்கி உள்ளிட்ட வங்கித் துறையில் மீண்டும் ஏற்படும் சிக்கல்களை சரி செய்யும் திட்டங்களில் திருமதி சீதாராமன் அறிவிக்கக் கூடும் என செய்திகள் வெளியாகியது.

10.பட்ஜெட்டில் அதிகம் பார்க்கப்பட்ட புள்ளிவிவரங்களில் வைரஸ் தடுப்பூசி திட்டத்தின் செலவு இருக்கும் என கூறப்படுகிறது. இது முன்னணி தொழிலாளர்கள், மூத்தவர்கள் அல்லது அதிக ஆபத்தில் உள்ள மக்களுக்கு கிடைப்பது குறித்து தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
mk stalin TVK VIJAY
Gujarat Titans vs Rajasthan Royals
donald trump Tax
Thirumavalavan VCK
Ghibli Cyber Crime
TN CM MK Stalin - TN BJP Leader Annamalai