பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டுக்கான விளக்கம் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் வகையில் உள்ளது!

Published by
மணிகண்டன்

பொருளாதாரத்தில் நலிவுற்ற பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தற்போது நாடு முழுவதும் பேசும் பொருளானது. இந்த இட ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசானது, ‘ ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு குறைவான வருமானம் உடையவர்கள், 5 ஏக்கருக்கு குறைவான விவாசாய நிலம் உள்ளவர்கள். 1000 சதுர அடிக்கு குறைவான இடத்தில் வீடு வைத்திருப்பவர்கள்’ என வரைமுறை விதித்து, இதற்குள் வரையறுக்கபடுபவர்கள்,

இந்த இடஒதுக்கீடு குறித்துஉச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்கு விசாரணை அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தரப்பில் வாதாடிய அரசு வழக்கறிஞர் வேணுகோபால் கூறுகையில், ‘ பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதால், சாதி மத பிரிவு இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் முயற்சி.’ என தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக வழக்கு தொடர்ந்தவர்களின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், ‘ இந்த 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டாம். அதற்க்கு பதிலாக அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என கூறினார். மேலும், ‘ இடஒதுக்கீடானது பொருளாதாரத்தை மட்டுமே வைத்து பிரிக்க கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழகியுள்ளது. ஆதலால் இந்த பொதுப்பிரிவில் நலிவடைந்தோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் உள்ளது.’ என வாதாடினர்.

பின்னர் பதிலளித்த நீதிபதி, ‘அதிகப்படியான இடஒதுக்கீடு சமுதாயத்தில் சமவாய்ப்பை பறிக்கும் வகையில் உள்ளது.சமுதாயத்தில் நலிவடைந்தோருக்கான இடஒதுக்கீடு சமத்துவத்தை மீறும் படி உள்ளது.’ என கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“இதுதான் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி.,” மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!

சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…

1 hour ago

உலகமே பார்த்து ஷாக்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! வெள்ளை மாளிகையில் என்னதான் நடந்தது?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…

2 hours ago

Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…

2 hours ago

சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…

4 hours ago

வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!

மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று  சென்னையில் வணிக…

5 hours ago

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

13 hours ago