பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டுக்கான விளக்கம் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் வகையில் உள்ளது!

பொருளாதாரத்தில் நலிவுற்ற பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தற்போது நாடு முழுவதும் பேசும் பொருளானது. இந்த இட ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசானது, ‘ ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு குறைவான வருமானம் உடையவர்கள், 5 ஏக்கருக்கு குறைவான விவாசாய நிலம் உள்ளவர்கள். 1000 சதுர அடிக்கு குறைவான இடத்தில் வீடு வைத்திருப்பவர்கள்’ என வரைமுறை விதித்து, இதற்குள் வரையறுக்கபடுபவர்கள்,
இந்த இடஒதுக்கீடு குறித்துஉச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்கு விசாரணை அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதாடிய அரசு வழக்கறிஞர் வேணுகோபால் கூறுகையில், ‘ பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதால், சாதி மத பிரிவு இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் முயற்சி.’ என தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக வழக்கு தொடர்ந்தவர்களின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், ‘ இந்த 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டாம். அதற்க்கு பதிலாக அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என கூறினார். மேலும், ‘ இடஒதுக்கீடானது பொருளாதாரத்தை மட்டுமே வைத்து பிரிக்க கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழகியுள்ளது. ஆதலால் இந்த பொதுப்பிரிவில் நலிவடைந்தோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் உள்ளது.’ என வாதாடினர்.
பின்னர் பதிலளித்த நீதிபதி, ‘அதிகப்படியான இடஒதுக்கீடு சமுதாயத்தில் சமவாய்ப்பை பறிக்கும் வகையில் உள்ளது.சமுதாயத்தில் நலிவடைந்தோருக்கான இடஒதுக்கீடு சமத்துவத்தை மீறும் படி உள்ளது.’ என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025