10 சதவீத இடஒதுக்கீடு …. 1ஆம் தேதி முதல் அமுல்…மத்திய அரசு சுற்றக்கை…!!
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கு மசோதா மக்களவையிலும் , மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட்து. இந்நிலையில் மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடை அமுல்படுத்தும் முயற்சியில் இறங்கி வருகின்றது.
இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வருகின்ற 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகத்திலும் அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.
இது குறித்து மத்திய அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை சார்பில் அனுப்பப்பட்ட சுற்றரிக்கையில் , பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துவது குறித்த விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளது.