லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி..!

கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சூரத்திலிருந்து பாவ்நகர் செல்வதற்காக காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சென்றுள்ளனர். அதில் 2 பெண்கள், 7 ஆண்கள் மற்றும் 1 குழந்தையும் இருந்துள்ளனர். இவர்கள் தாராபூர் நெடுஞ்சாலையில் ஆனந்த் மாவட்டத்தில் சரியாக இந்திரனாஜ் கிராமம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி காரை நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேரும் பலியாகியுள்ளனர்.
இறந்தவர்களின் உடல்கள் தாராபூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மாவட்ட கலெக்டருடன் பேசியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025