ஹரியானாவில் பத்திரிகையாளர்களுக்கு 10 லட்சம் காப்பீடு!
ஹரியானா மாநிலத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு 10 லட்சம் காப்பீடு அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் தற்பொழுது இந்தியாவில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதனால் மக்கள் யாரும் அதிகம் வெளியில் வர கூடாது என 144 ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மருத்துவர்கள், போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் ஊரடங்கு இருந்தாலும் அனுமதியுடன் வெளியில் சென்று கொரோனாவுக்கு பலியாகின்றனர். இவ்வாறு தன்னலம் பாராது உழைக்கும் இவர்களில் காவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து தற்பொழுது ஹரியானா மாநிலத்தில் பத்திரிகையாளர்களாக வேலை செய்பவர்களுக்கும் 10 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.