பீகாரில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – தேஜஷ்வி யாதவ்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது.பீகார் தேர்தலை பொருத்தவரை ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.மேலும் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியும் போட்டியிடுகிறது காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
பீகாரில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் ,பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டது. இதனிடையே, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பீகாரில் உள்ள பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் ,முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஷ்வி யாதவ் கூறுகையில், பீகாரில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.