கொரோனாவால் உயிரிழக்கக் கூடிய பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடிய முன்களப் பணியாளர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு மாநிலங்களிலும் நிவாரணம் அளிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்திலும் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான முழு பொறுப்பையும் அம்மாநில அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், நேற்று உத்தர பிரதேசத்தில் இந்தி மொழி பத்திரிக்கையாளர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி உத்திரப்பிரதேசத்தின் அனைத்து இந்தி மொழி பத்திரிக்கையாளர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவால் உயிரிழக்க கூடிய பத்திரிக்கையாளர் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் இந்த மொழி பத்திரிகையாளர்கள் நாட்டை முன்னேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர் எனவும், தற்போதைய சூழலில் உயிரை பணையம் வைத்து கொரோனா பாதிப்பு செய்திகளை துல்லியமாக அளிக்க உதவியாக உள்ள பத்திரிகையாளர்களுக்கு ஆதரவளிப்பது என் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…