கேரள சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மணடலபூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனை அடுத்து, இன்று பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அதிகமாக இருந்தது. இன்று முதல் மகர ஜோதி தரிசனம் வரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்ப்பு 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டதால், ஏற்கனவே உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பான அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்கிற நிலை தொடருகிறது.
இதனையடுத்து இன்று முதல் நாளே ஆந்திராவை சேர்ந்த 10 நடுத்தர வயது பெண்கள் ஐயப்பனை தரிசிக்க சென்றனர். ஆனால் அவர்களிடம் கேரள போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.
கேரளா மாநிலம் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், ‘ சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் அனைத்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்க முடியும் என கூறியுள்ளார். மேலும், புரட்சி செய்வதற்கான இடம் சபரிமலை இல்லை எனவும் தனது கருத்தை தெரிவித்தார்.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…