மும்பை அருகே கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் உயிரிழப்பு…!
மும்பை அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் உயிரிழப்பு.
மும்பை அருகே உள்ள பிவாண்டி பகுதியில் படேல் குடியிருப்பு பகுதியில் 20 குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் தீயணைப்பு துறையினர் ஒரு குழந்தை உட்பட சிக்கியிருந்த 11 பேரை காப்பாற்றியுள்ளனர். மேலும் மொத்தமாக இந்த விபத்தில் சிக்கி இருந்த 20 இறுதிவரை மீட்டுள்ளனர், மேலும் இந்த கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.