மூன்று நாள்களுக்கு பிறகு சீன இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இரண்டு மேஜர்கள் உட்பட 10 இந்திய ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. கடந்த திங்கள்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தததாக அறிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் 76 ராணுவ வீரர்கள் சீன இராணுவத்தால் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில், 58 பேர் சிறு காயங்கள் ஏற்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மூன்று நாள்களுக்கு பிறகு சீன இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இரண்டு மேஜர்கள் உட்பட 10 இந்திய ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலில் சில ராணுவ வீரர்கள் காணாமல் போனதாக தகவல் வெளியானது. அதற்கு நேற்று இந்திய ராணுவம் இந்திய வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்று விளக்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக 1962 ஜூலை மாதம் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் சீன இராணுவம் இந்திய வீரர்களை சிறைபிடித்துள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…