அடுத்த மாதம் பொதுத்துறை வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை என தகவல்!
- அடுத்த மாதம் பொதுத்துறை வங்கிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை வருவதாக ரிசர்வ் வங்கி தகவலில் கூறப்பட்டுள்ளது.
- இந்த விடுமுறை ஒவ்வொரு வங்கிகளை பொறுத்தும் , ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்தும் மாறுபடும்.
அடுத்த மாதம் அதாவது ஜனவரி மாதத்தில் பொதுத்துறை வங்கிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை வருவதாக ரிசர்வ் வங்கி தகவலில் கூறப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஒவ்வொரு வங்கிகளை பொறுத்தும் , ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்தும் மாறுபடும்.
பொதுவாக வங்கிகளுக்கு விடுமுறை ஞாயிற்றுகிழமை மற்றும் இரண்டு சனிக்கிழமைகள் கொடுக்கப்படும். ஆனால் அடுத்த மாதம் 5 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறை மேலும் பல மாநிலங்களில் உள்ளூர் பண்டிகைக்கு விடுமுறை கொடுக்கப்பட உள்ளது.
இந்நிலையில் வங்கி பணிகளை முன்பாகவே திட்டமிட்டு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் என்பதால் ஏடிஎம் இயந்திரங்களில் போதிய அளவு பணம் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
ஜனவரி 2 – வியாழன் – மன்னம் ஜெயந்தி – கேரளா மட்டும்
ஜனவரி 16 – வியாழன் – திருவள்ளுவர் தினம் – தமிழ்நாடு , புதுச்சேரி
ஜனவரி 17 – வெள்ளி – உழவர் திருநாள் – தமிழ்நாடு , புதுச்சேரி
ஜனவரி 23 – வியாழன் – நேதாஜி பிறந்த நாள் – மேற்கு வங்காளம் , திரிபுரா, ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களில் மட்டும்.