திருவனந்தபுரம் கடற்கரை கிராமங்களில் 10 நாள் முழு ஊரடங்கு – பினராயி விஜயன்

Default Image

நேற்று கேரளாவில் 593 பேருக்கு கரோனா உருதியானது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இந்நிலையில் திருவனந்தபுரம் கடற்கரை கிராமங்களில் 10 நாள் முழு ஊரடங்கு. திருவனந்தபுரம் கடற்கரை பகுதியில் இன்று இரவு 12 மணி முதல் ஜூலை 28 நள்ளிரவு வரை முழு ஊரடங்கு என கேரளா முதல்வர் தெரிவித்தார்.

கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 593 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 11,659ஆக உயர்ந்துள்ளது. மறுத்தவமனையில் 6,416 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர். நேற்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 116 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 90 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேருக்கு கொரோனா பதிவாகியுள்ளன என கேரளா முதலவர் பினராயி விஜயன் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று 60 சதவீதம் உள்ளூர் பரவுதலால் ஏற்படுகின்றன. திருவனந்தபுரத்தில் இரண்டு இடங்களில் கொரோனா வைரஸின் சமூக பரவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா சங்கிலியை உடைக்க அனைவரும் கொரோனா வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்த முதல்வர் இன்று இரவு 12 மணி முதல் ஜூலை 28 நள்ளிரவு வரை முழு ஊரடங்கு என கூறினார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்