திருவனந்தபுரத்தில் உள்ள சைதன்யா லக்கி சென்டரில் விற்பனை செய்யப்பட்ட HB 727990 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளதுகேரள அரசின் விஷூ பம்பர் 10 கோடி பரிசு தொகைக்கான லாட்டரியை வென்ற அதிர்ஷ்டசாலி இன்னும் லாட்டரி சீட்டை கொண்டுவராதது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிக்கெட்டை விற்ற முகவர், அதிர்ஷ்ட குலுக்கல்லுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு டிக்கெட் வாங்கப்பட்டதாகக் கூறினார். டிக்கெட் வாங்கியதற்காக திர்ஹாம் கொடுத்த இளைஞர் முதல் பரிசை வென்றிருப்பாரா என்று அந்த முகவர் கருதுவதாக தெரிவித்தார்.
மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜசீந்தா மற்றும் ரங்கன் என்ற தம்பதியினர் இங்கிருந்து லாட்டரி சீட்டு மூட்டைகளை விற்பனைக்கு வாங்கியுள்ளனர். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கியவர் வெற்றியாளராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.அவர் டிக்கெட்டை திர்ஹாம் கொடுத்து வாங்கியுள்ளார்.
லாட்டரி வெற்றியாளரால் அதிர்ஷ்ட குலுக்கல் முடிந்து 30 நாட்களுக்குள் லாட்டரி சீட்டை வழங்க முடியவில்லை என்றால், வெற்றியாளர் அதற்கான காரணத்தை லாட்டரி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.ஒரு மாதத்திற்குள் யாரும் டிக்கெட் எடுக்கவில்லை என்றால், 6 கோடியே 16 லட்சம் ரூபாய் அரசின் கருவூலத்துக்குத் திரும்ப ஒப்படைக்கப்படும்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…