இந்திய ராணுவ மரணத்திற்குப் பழிவாங்க சீனாவின் எல்லைக்கு கிளம்பிய 10 சிறுவர்கள்.!
இந்திய இராணுவ வீரர்களின் வீரமரணத்திற்குப் பழிவாங்குவதற்காக 10 சிறுவர்கள் புறப்பட்டபோது அதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தததாக அறிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 76 ராணுவ வீரர்கள் சீன இராணுவத்தால் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில், 58 பேர் சிறு காயங்கள் ஏற்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சீன ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 76 வீரர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவ வீரர்கள் யாரும் காணவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. காயமடைந்தவர்களில் 18 பேர் லேவில் இருக்கும் மருத்துவமனையிலும் மற்றும் 58 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் லடாக் எல்லைப் பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் பத்து சிறுவர்கள் இராணுவ வீரர்களின் வீரமரணத்திற்குப் பழிவாங்குவதற்காக புறப்பட்டபோது அதை போலீசார் தடுத்து நிறுத்தினர். தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் அலிகரை மாவட்டத்தை சேர்ந்த பத்து சிறுவர்கள் மாவட்ட எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தியபோது பழிவாங்குவதற்காக இந்தியா-சீனா எல்லைக்கு அணிவகுக்க திட்டமிட்டிருந்தனர்.
அவர்களை விசாரிக்கும்போது எங்கள் வீரர்களைக் கொன்றதற்கு சீனாவுக்கு “ஒரு பாடம்” கற்பிக்க விரும்புவதாக அவர்கள் கூறியுள்ளார்கள். இதனையடுத்து போலீசாரை இந்த விஷயம் ஈர்க்கப்பட்டதாகத் தோன்றினாலும் அந்த சிறுவர்களுக்கு ஆலோசனை வழங்கி திருப்பி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.