40 நகரங்களை இணைக்க 10 வந்தே பாரத் ரயில்கள்- இந்திய ரயில்வேயின் திட்டம்..!

Default Image

40 நகரங்களை இணைக்கும் வகையில், 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

புதியதாக பொறுப்பேற்றுள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூடுதலாக 10 வந்தே பாரத் ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலின் எண்ணிக்கையை இந்திய ரயில்வே அதிகரிக்க உள்ளது. ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், 10 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 2022 க்குள் இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது சுமார் 40 நகரங்களை இணைக்கும்.

நாட்டின் ரயில் சேவைகளில் மேம்பாட்டைக் நிரூபிப்பதற்காக 2022 ஆகஸ்ட்க்குள் குறைந்தது 40 நகரங்களை வந்தே பாரத் ரயில்களுடன் இணைக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பொறியியல் நிறுவனமான மேத்தா தனது உற்பத்தித் திட்டத்தை விரைவுபடுத்துமாறு புதிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைணவ அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் உள்ள 3 உற்பத்தி பிரிவுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், மாதத்திற்கு 6 அல்லது 7 வந்தே பாரத் ரயில்களை உற்பத்தி செய்ய முடியும் என ரயில்வே கணக்கிட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
NTK Leader Seeman
Afghanistan vs Australia
tamilnadu city in rain
seeman
Seeman - KayalVizhi
shami - arshdeep singh -rohit sharma