Categories: இந்தியா

10 வயது சிறுமி பலாத்காரம் ?அனலாக பரவும் #JusticeForGeeta ஹேஷ்டாக்!

Published by
Venu

10 வயது சிறுமி மதரசாவில் பலாத்காரம் செய்யப்பட்டதை எதிர்த்து நெட்டிசன்கள் ஒரு ஹேஷ்டாக் # அமைத்து கடுமையாக பதிவிட்டு வருகின்றனர்.

கிழக்கு டில்லியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் கடைவீதிக்கு சென்றுள்ளார். அங்கு அந்தச் சிறுமி காணாமல் போனார். அது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. கண்காணிப்பு காமிரா பதிவின் மூலம் அந்தப் பெண்ணை ஒரு ஆண் அழைத்துச் செல்வது தெரிந்தது. அந்தச் சிறுமியின் பெயர் கீதா என கூறப்படுகிறது

அதன் பிறகு காவல்துறை அந்த ஆண் ஒரு மதராசாவில் கல்வி பயிலும் மாணவன் என்பதை கண்டறிந்தது. அந்த மதரசாவில் அவருடன் இருந்த கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் அந்த 17 வயதான ஆண் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அந்த 17 வயதான ஆண் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நீதிபதியிடம் அந்த சிறுமி தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

இது குறித்து கடும் நடவைக்கை எடுக்கக் கோரி காசிப்பூரில் ஒரு பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் பலாத்காரம் செய்யப்பட்ட பரிதாபத்துக்குரிய சிறுமி முகத்தை மறைத்தபடி கலந்துக் கொண்டார். இந்த விவரம் வெளியானதும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக பல நெட்டிசன்கள் களம் இறங்கி உள்ளனர்.

ஏற்கனவே கத்துவா பகுதியில் ஒரு சிறுமி கோவிலில் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த தகவலில் கடும் சர்ச்சை ஏற்பட்டது தெரிந்ததே. தற்போது இந்த விவகாரத்திலும் நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். பலரும் இதற்காக புதிய ஹேஷ்டாக் # ஒன்றை பதிந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். #JusticeForGeeta என்னும் ஹேஷ்டாக் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

 

Recent Posts

புற்றுநோயில் இருந்து மீண்ட ஜெயிலர் பட பிரபலம்… மனைவியோடு உருக்கமாக பதிவு!

சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…

48 minutes ago

அரசுப் பள்ளிகள் தாரைவார்ப்பா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…

1 hour ago

அமெரிக்கா: புத்தாண்டு கொண்டாட்டத்திற்குள் அதிவேகமாக புகுந்த கார்.. 10 பேர் பலி!

நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…

2 hours ago

ரிலீஸ் தேதியுடன் வந்த ‘இட்லி கடை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…

2 hours ago

மாதவன் பேமிலியுடன் ஜாலியான ட்ரிப்… துபாயில் புத்தாண்டு கொண்டாடிய நயன் – விக்கி!

துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…

3 hours ago

அண்ணா பல்கலை. விவகாரம் – அதிமுக கேவியட் மனு தாக்கல்!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…

4 hours ago