10 ஆயிரம் புடவைகளை…..! தன் தோற்ற தொகுதிக்கு தீபாவளி பரிசளித்த அமைச்சர்..!!!

Default Image

10 ஆயிரம் புடவைகளை தன் தோற்ற தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசளித்துள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

Related image

உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதி பெண்களுக்கு  தீபாவளி பரிசாக 10 ஆயிரம் புடவைகளை  மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அனுப்பியுள்ளார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து  பா.ஜக வேட்பாளராக ஸ்மிருதி இராணி போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார் இருந்தாலும் தேர்தலில் ராகுலுக்கு கடுமையான போட்டி கொடுத்தார்.

Image result for smriti irani

தான் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற பின்னும் அந்த தொகுதிக்கு அடிக்கடி சென்று வரும் ஸ்மிருதி  அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார். மேலும் அத்தொகுதியில் உள்ள பெண்களுக்கு புடவை பரிசாக வழங்கி வருகிறார்.இதே போல் கடந்த ஆண்டும் தீபாவளிக்கு பரிசளித்த நிலையில் ஆண்டும் தீபாவளியையொட்டி, சகோதரியின் அன்பு பரிசு என்ற பெயரில்மத்திய அமைச்சர் ஸ்மிருதி அனுப்பிய 10 ஆயிரம் புடவைகளை அமேதியில் உள்ள பா.ஜக மகளிர் அணி இந்த புடவைகளை பெண்களுக்கு கொடுத்தனர்.

Image result for smriti irani AMETHI

இதற்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இது குறித்து பா.ஜக மாவட்ட தலைவர் உமா சங்கர் பாண்டே புடவை வழங்குப்படுவதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. இது மத்திய அமைச்சர் தன் மகிழ்ச்சியை மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக அனுப்பிஉள்ளார்  என்று கூறினார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்