10-ஆம் தேதி கர்நாடகத்தில் நடைபெற இருந்த பந்த் ஒத்திவைப்பு….!
கன்னட சாலுவாலியா அமைப்பு கர்நாடக மாநிலத்தில் வருகிற 12-ஆம் தேதி நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டத்தை ஒத்தி வைப்பதாக கூறியுள்ளது.
இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமைதிக்க காக்க கோரி உள்ளனர் என்றார். மேலும் தற்போதைய உத்தரவில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து நீதிபதிகள் எதுவும் கூறவில்லை என்ற அவர், இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பப்படுகிறது என்றார். மே மாதம் 3-ஆம் தேதி நடைபெறும் விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் நாகராஜ் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.