1 லட்சம் தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி – பிரதமர் மோடி பேச்சு
1 லட்சம் தேசிய மாணவர் படையினருக்கு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பயிற்சி அளித்து வருகின்றதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி கரியப்பா மைதானத்தில் தேசிய மாணவர் படையின் அணிவகுப்பினை பிரதமர் நரேந்திரமோடி பார்வையிட்டார்.பின், பிரதமர் நரேந்திரமோடி தேசிய மாணவர் படை அணிவகுப்பில் உரையாற்றினார்.அவரது உரையில்,இயற்கை பேரிடர் காலங்களிலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணிகளின் போது, தேசிய மாணவர் படையை சேர்ந்த லட்சக்கணக்கானோர் அரசு நிர்வாகத்திற்கு உதவி புரிந்தனர். இது பாராட்டத்தக்கது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் அல்லது வேறு எந்த பேரழிவாக இருந்தாலும் , தேசிய மாணவர் படையினர் நாட்டு மக்களுக்கு உதவின.தேசிய மாணவர் படையின் பங்கு மேலும் விரிவடைவதைக் காண அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த, தேசிய மாணவர் படையின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
கடலோர மற்றும் எல்லைப் பகுதிகளில் சுமார் 175 மாவட்டங்களில் தேசிய மாணவர் படையினருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்காக, 1 லட்சம் தேசிய மாணவர் படையினருக்கு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பயிற்சி அளித்து வருகின்றதாகவும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.