விடுமுறை நாளில் தொந்தரவு செய்தால் 1 லட்சம் அபராதம்! அதிரடி அறிவிப்பு.!
விடுமுறை நாளில் சக ஊழியரை தொந்தரவு செய்தால் 1 லட்சம் அபராதம் எனும் புதிய கொள்கையை ட்ரீம்-11 அறிமுகப்படுத்துகிறது.
இந்தியாவின் மிகப்பெரும் ஸ்போர்ட்ஸ் ஆப் நிறுவனமான ட்ரீம்-11, ஊழியர்களுக்கு ஒரு புதிய கொள்கையை (பாலிசி) அறிமுகப்படுத்துகிறது. இதன்படி விடுமுறையில் உள்ள ஊழியர்களை தொந்தரவு செய்யும் பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கும் “ட்ரீம்-11 அன்பிளக்(Unplug) பாலிசி” அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த பாலிசியின் படி விடுப்பில் உள்ள ஊழியர்களை தொந்தரவு செய்தால் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இது குறித்து தெரிவித்த ட்ரீம்-11 நிறுவனம், நாங்கள் எங்கள் பணியாளர்களுக்கு விடுப்பு நாளில் முழு சுதந்திரம் கொடுக்கிறோம், மேலும் அன்பானவர்களுடன் அவர்கள் நேரம் செலவிடும்போது, அதனைக் கெடுக்க விரும்பவில்லை என்று கூறியது.