‘1 கோடி சப்ஸ்கிரைப்பர்ஸ்’ – பிரதமர் மோடியின் புதிய சாதனை..!

Default Image

பிரதமர் மோடியின் யூடியூப் சேனலை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

தற்போது இந்திய பிரதமராக உள்ள நரேந்திர மோடி அவர்கள் கடந்த 2007ஆம் ஆண்டு குஜராத் முதல் மந்திரியாக இருந்தபோது யூடியூப் சேனலை தொடங்கினார்.  பிரதமர் மோடியை பொறுத்தவரையில் எப்பொழுதுமே சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருபவர் என்று கூறலாம்.

இந்நிலையில், தற்போது பிரதமர் மோடியின் யூடியூப் சேனலை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. உலக தலைவர்களில் இந்த எண்ணிக்கை எட்டிய முதல் தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் பிரேசில் அதிபர்  உள்ளார். இந்திய அளவில் ஒப்பிடும் போது பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக ராகுல் காந்தி அவர்களுக்கு 5.25 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்