மாசுக்களை ஏற்படுத்திய மாநகராட்சிக்கு 1 கோடி அபராதம் – கோபால் ராய்
மாசுக்களை ஏற்படுத்திய வட டெல்லி மாநகராட்சிக்கு 1 கோடி அபராதம் விதிக்கப்ட்டுள்ளது.
டெல்லியில் உள்ள கிராரி கிராமத்தில் குப்பை எரிக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காததற்காக வட டெல்லி மாநகராட்சிக்கு 1 கோடி அபராதம் விதிக்க டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று உத்தரவு பிறப்பித்தார்.
டெல்லியின் காற்றின் தரம் படிப்படியாக மோசமடைந்து வருகிறது, ஆனால் மாநகராட்சிகள் அதை கண்டுக்கொள்ளவில்லை. இதனால், சுற்றுச்சூழல் விதிமுறைகள் வெட்கமின்றி மீறப்படுகின்றன என கோபால் ராய் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்நிலையில், குப்பை எரிப்பதை கட்டுப்படுத்தாததற்காக வட டெல்லி மாநகராட்சி அமைப்புக்கு 1 கோடி அபராதம் விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், டெல்லியின் பிரதான பகுதியில் மாசு அளவு சற்று குறைந்துவிட்டது என்று இந்திய வானிலை ஆய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.