உயிரிழந்த இராணுவ வீரரின் குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவி என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.
கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் இருந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருபதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து, பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் போலீசாருடன், பாதுகாப்புப்படையினர் இணைந்து ஈடுபட்டு வந்தனர். அப்போது, நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை மோதலில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சேபோய் மணிஷ் என்ற வீரர் படுகாயம் அடைந்தார்.
அவரை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மணிஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இன்று அவரது உடல் மத்திய பிரதேசம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, சேபோய் மணிஷ் உடலுக்கு மத்திய பிரததேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேபோய் மணிஷ் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். மேலும், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்று சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
சென்னை : திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை கலைஞர் பெயரால் அமைப்பதற்கான பணிகள் இன்று…
வாஷிங்டன் : அமெரிக்காவில் 47-வது அதிபர் தேர்தலானது நிறைவடைந்து, 2-வது முறையாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வாகி…
டர்பன் : இந்திய அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த டி20 தொடரில் 4…
ஒட்டாவா : கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த தூதரக சேவை முகாம்களுக்கு, கனடா பாதுகாப்பு அதிகாரிகள் அதாவது அந்நாட்டு…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…