சரக்கு லாரி ஏற்றி கொல்லப்பட்ட டி.எஸ்.பி குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவி.! மாநில முதலமைச்சர் அறிவிப்பு.!
ஹரியானா மாநிலத்தில் நுஹ் மாவட்டத்தில் ஆரவல்லி மலை பகுதியில் சட்ட விரோதமாக கற்களை கடத்தும் பணிகள் நடைபெறுவதை அறிந்த டி.எஸ்.பி சுரேந்தர் சிங் பிஸ்னாய் காலை சம்பவ இடத்திற்க்கு சென்றுள்ளார்.
அங்கு, சட்டவிரோதமாக கற்களை கடத்தி வந்த லாரியை மடக்கி பிடிக்க போலீசார் முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த லாரி ஓட்டுநர் நிற்காமல் சென்றுள்ளான். உடனே காவலர்கள் துரத்தி பிடிக்க முயற்சித்துள்ளார். இதில் எதிர்பாராவிதமாக டி.எஸ்.பி சுரேந்தர் சிங் லாரி மோதி உயிரிழந்துவிட்டார்.
மற்ற காவலர்கள் பக்கவாட்டில் குதித்து தப்பித்து விட்டனர். டி.எஸ்.பியை லாரி ஏற்றி கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உயிரிழந்த டி.எஸ்.பி சுரேந்தர் சிங் பிஸ்னாய் அவர்களது குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கபடும் என்பதையும் அறிவித்தார்.