8 மீட்டர் சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளையடித்த திருட்டு கும்பல்.! 1.8 கிலோ தங்கம் மாயம்.!
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் எஸ்பிஐ வங்கியில் சுரங்கம் தோண்டி 1.8 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) எஸ்பிஐ வங்கியில் 1.8 கிலோ தங்க நகைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்துள்ளது. இதற்காக அந்த கும்பல் வங்கிக்கு அருகே சுமார் 10 அடிக்கு சுரங்கம் தூண்டியுள்ளது.
8 மீட்டர் நீளமுள்ள சுரங்கம் தோண்டி அதன் மூலம் வங்கிக்குள் நுழைந்த மர்ம கும்பல் அங்கு லாக்கரில் இருந்த 1.8கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதன் மதிப்பு 1 கோடி ரூபாய் இருக்கும் என குறிப்பிடபட்டுள்ளது. இந்த திருட்டானது வங்கியில் பணிபுரியும் ஊழியர் உதவியோடு நடந்திருக்கும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.