நாளை முதல் நாடு முழுவதும் உள்ள 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் முன்பதிவு தொடங்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இந்நிலையில், ஜூன் 1-ம் தேதி முதல் 200 ரயில்கள் முதல் கட்டமாக இயக்கப்பட உள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்டது தான் சிறப்பு ரயில்கள் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ரயிலுக்கான கால அட்டவணை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டது. ஜூன் 1 முதல் ஏ.சி. இல்லாத நாள்தோறும் 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்களுக்காக முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் IRCTC மற்றும் செல்போன் செயலி மூலம் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் நாடு முழுவதும் உள்ள 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் முன்பதிவு தொடங்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலைய கவுண்டர்களில் 2அல்லது 3 நாள்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்றும், முதற்கட்டமாக இயக்கப்பட உள்ள 73 சிறப்பு பயணிகள் ரயிலில் செல்ல 2 மணி நேரத்தில் 1,49,025 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…