நாளை முதல் 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் முன்பதிவு.!

Default Image

நாளை முதல் நாடு முழுவதும் உள்ள 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் முன்பதிவு தொடங்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்  மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இந்நிலையில்,  ஜூன் 1-ம் தேதி முதல் 200 ரயில்கள் முதல் கட்டமாக இயக்கப்பட உள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்டது தான் சிறப்பு ரயில்கள் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ரயிலுக்கான கால அட்டவணை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டது. ஜூன் 1 முதல் ஏ.சி. இல்லாத நாள்தோறும் 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்களுக்காக முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் IRCTC மற்றும் செல்போன் செயலி மூலம் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில்  நாளை முதல் நாடு முழுவதும் உள்ள 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் முன்பதிவு தொடங்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலைய கவுண்டர்களில் 2அல்லது 3 நாள்களில்  டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்றும், முதற்கட்டமாக இயக்கப்பட உள்ள 73 சிறப்பு பயணிகள் ரயிலில் செல்ல  2 மணி நேரத்தில் 1,49,025 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்