கல்விக் கொள்கை தொடர்பாக 1.50 லட்சம் கருத்துகள் பெறப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார்.
புதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டது. பதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின் 3 வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் திருத்தப்பட்ட வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஆனாலும் புதிய கல்வி வரைவு கொள்கையை நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
பின் கல்விக்கொள்கை தொடர்பாக கருத்து கூற அவகாசம் வழங்க கோரி தமிழக தலைவர்கள் மற்றும் அமைப்புகள் கோரிக்கை விடுத்ததால் மத்திய அரசு அவகாசத்தை கூட்டி உத்தரவு பிறப்பித்தது.ஜூலை 31-ஆம் தேதியுடன் அவகாசம் முடிய உள்ள நிலையில் தற்போது ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், புதிய கல்விக் கொள்கையை விரைவில் நடைமுறைப்படுத்த முயற்சிகளை எடுத்து வருகிறோம் .கல்விக் கொள்கை தொடர்பாக 1.50 லட்சம் கருத்துகள் பெறப்பட்டுள்ளன. கருத்துகளின் அடிப்படையில் பரிசீலனை செய்து கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டுவர முயற்சி என்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார்.
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…