ரோஜ்கர் திட்டம் மூலம் நாட்டில் உள்ள பல்வேறு மத்திய அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் தகுதி வாய்ந்த இளைஞர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த வருட ரோஜ்கர் திட்டம் இந்தியா முழுக்க 47 இடங்களில் நடைப்பெற்றது.
இதில் சுமார் 1 லட்சத்திற்கும் மேலான இளைஞர்களுக்கு மத்திய அரசின், உயர்கல்வித்துறை, அணுசக்தி துறை, வருவாய்த்துறை. உள்த்துறை , பாதுகாப்புத்துறை, நிதி சேவைகள் துறை, குடும்பநல துறை, பழங்குடியினர் நலத்துறை, ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகள் அளிக்கப்பட்டுள்ளது.
ரோஜ்கர் மேளா : 1 லட்சம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் பிரதமர் மோடி.!
இந்த திட்டத்தின் கீழ் வேலை பெற்ற இளைஞர்களுக்கு பிரதமர் மோடி காணொளி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்கினார். அந்த விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், கடினமாக உழைத்தால் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க முடியும் என்பதை ஒவ்வொரு இளைஞர்களும் தற்போது அறிந்துள்ளனர்.
கடந்து 2014-ம் ஆண்டு முதல் இளைஞர்களை இந்திய அரசுடன் இணைத்து அவர்களை வளர்ச்சியில் பங்குதாரர்களாக மாற்ற முயற்சித்து வருகிறோம். முந்தைய அரசை விட (காங்கிரஸ்) 1.5 மடங்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளோம் என்றும் பிரதமர் மோடி இன்றைய உரையில் குறிப்பிட்டார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…