நாளை நடைபெறவுள்ள ‘பூமி பூஜை’ நிகழ்ச்சியில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட ‘ரகுபதி லட்டு’ விநியோகிக்கப்படும்
அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள பிரமாண்டமான ராமர் கோயில் விழாவில் பிரதமர் அடிக்கள் நாட்டவுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய பிரமுகர்கள் 175 பேருக்கு மட்டுமே அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளது.
பாட்னாவின் மகாவீர் மந்திர் அறக்கட்டளை நாளை அயோத்தியில் உள்ள ராம் கோயிலின் ‘பூமி பூஜை’ நிகழ்ச்சியில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட ‘ரகுபதி லட்டு’ விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட லட்டுக்களில், 51,000 லட்டுக்கள் கோயிலின் அஸ்திவார விழாவை முன்னிட்டு ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ANI செய்தி நிறுவனிடம் பேட்டியளித்த ஆச்சார்யா கிஷோர் குணால் “அயோத்தி ‘ பூமி பூஜை ’நிகழ்ச்சியில் 1,25,000 லட்டுகளை ‘ ரகுபதி லட்டு ’என்ற பெயரில் விநியோகிக்கப்படும். 51,000 லட்டுக்கள் ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில் ஒப்படைக்கப்படும்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் மீதமுள்ள லடூக்கள் பீகாரில் உள்ள சீதாமாரியில் உள்ள ஜானகியின் பிறந்த இடத்திலும், சுமார் 25 புனித யாத்திரை இடங்களிலும் உள்ள கோயில்களுக்கு அனுப்பப்படும். நாளை பீகாரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராம் மற்றும் ஹனுமான் பக்தர்களிடையே லட்டுகள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த லட்டுக்கள் தூய மாடு நெய் கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்று குணால் மேலும் கூறினார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…