இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1.07 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று..!!
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1.07 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாற்றில் ஒரே நாளில் 1,03,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 1,25,89,067ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 478 பேர் கொரோனா வைரஸ் காரணத்தால் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மொத்தமாக உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 1,65,101 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 1,16,82,136 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 52,847 பேர் வீடு திருப்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.