இந்தியாவில் 1.07 லட்சமாக அதிகரித்த உயிரிழப்பு – மொத்த பாதிப்பு எவ்வளவு?
இந்தியாவில் 1.07 லட்சமாக கொரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு தான் செல்கிறது, இதற்கான தடுப்பு மருந்துகளை பல நாடுகளும் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தான் வருகின்றன, ஆனால் கண்டுபிடித்த பாடில்லை. இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 6,977,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 107,450 பேர் உயிரிழந்துள்ளனர், 5,985,505 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 73,196 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 929 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 884,053 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.