1 வயது பிஞ்சு குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரன் கைது.!மகராஷ்டிராவில் பரபரப்பு..!
சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதுபோன்ற கொடூர சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. தலைநகர் டெல்லியில் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில், மகராஷ்டிரா மாநிலம் புனேவில் 1 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனே நகரில் தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கூலி வேலை செய்து வருகிறது. அந்த குடும்பத்தினர் அங்குள்ள ஒரு பகுதியில் சாலையோரம் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்த அவர்கள் எழுந்த அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த தம்பதி அருகே தூங்கிக்கொண்டிருந்த அவர்களது ஒரு வயது பெண் குழந்தை காணமல் போனது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால் குழந்தை கிடைக்காததால் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி பதிவை சோதித்த போது ஒருவர் அந்த குழந்தையை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் அப்பகுதிக்கு அருகில் இருந்து அந்த குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து சிசிடிவி பதிவுகளை வைத்து அக்குழந்தையை கடத்தி சென்ற மால்ஹரி பன்சோட் (22) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.