கிரிப்டோவில் லாபம் பெற்றுத்தருவதாக ₹500 கோடி மோசடி!
கிரிப்டோவில் அதிக லாபம் பெற்றுத்தருவதாகக் கூறி மக்களிடம் ஒரு கும்பல் ரூ.500 கோடி மோசடி செய்துள்ளது.
டெல்லியில் ஒரு கும்பல், புதிய கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதில் 200% வருமானம் பெற்றுத்தருவதாகக் கூறி மக்களிடம் ரூ.500 கோடி மோசடி செய்துள்ளது. அந்த கும்பல் பெரிய நட்சத்திர ஹோட்டலில் கூட்டங்களை நடத்தி அதில் கிரிப்டோ குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் விடுமுறையில் முதலீட்டாளர்களை கோவாவிற்கு அழைத்துச்சென்று அங்கு ஒரு பெரிய நிகழ்வை நடத்தினர். அங்கு அவர்களுக்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் செயல்பாடுகளை விளக்கினர். இதனால் அவர்களும் கிரிப்டோவில் முதலீடு செய்தனர்.
மேலும் பெரிய அளவில் முதலீடு செய்பவர்கள், துபாய்க்கு விடுமுறையில் அழைத்து செல்வதாக உறுதியளித்திருந்தனர். ஆனால் அதன்பிறகு துபாய் சென்றுபார்த்தால் அங்கு அவர்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.