ஹோமியோ மருந்து சாப்பிட்டவர்களுக்கு உடல்நல குறைவு..!

Default Image
கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. இதற்கு 16 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் நோய் பாதிப்புகளோடு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து நோய் பரவி வருவதால் கேரள அரசு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
மாநில சுகாதார மந்திரி சைலஜா பேசுகையில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ள 1,950 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே நிபா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து என கூறி பொதுமக்கள் தாங்களே மருந்துக்களை உட்கொள்ளும் நிலையும் காணப்படுகிறது. இதுபோன்று கோழிக்கோடு பகுதியில்  ‘நிபா’ வைரஸை கட்டுப்படுத்தும் என ஹோமியோ மருந்து சாப்பிட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கோழிக்கோடு மாவட்ட ஹோமியோ டிஎம்ஒ, மருந்து விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கையை கோரி உள்ளார். மருந்து சாப்பிட்டவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டு உள்ளது என செய்தி வெளியாகி உள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவமனையில்தான், நிபா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து என பொதுமக்களுக்கு மருந்து கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது, மருத்துவமனை பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்