ஹைதராபாத் வருகிறார் அமித் ஷா.!
தெலங்கானா மாநிலம் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. இம்மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் கட்சிகள் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன.
இந்நிலையில், பாஜக தலைவர் அமித் ஷா, 2-வது முறையாக 22-ம் தேதி ஹைதராபாத் வரவுள்ளார். தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க வியூகங்களை வகுக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். தென்னிந்தியாவில் கட்சியை பலப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.