ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை தரவில்லை என்றால் தகுந்த பதிலடி காத்திருக்கும்…. இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா….

Published by
Kaliraj

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது.இதனையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும்,மருத்துவ ஊழியர்கள் கரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயினை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தன. எனவே இந்த அறிவிப்பை அடுத்து ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துகளின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், இந்த தடைகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசியுள்ளார். அந்த உரையாடலில்,   இருநாடுகளில் நிலவும் கொரோனா நிலவரம் குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர்.  மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  இந்திய பிரதமர் மோடியிடம், இந்தியா ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்துக்கு விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடைக்கு  அமெரிக்காவுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். இதற்கு, பரிசீலித்து உரிய முடிவெடுப்பதாக மோடி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், மோடியிடம் பேசுகையில் அமெரிக்க பொருள்கள் வெளிவருவதற்கு அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்தேன். அதேபோல், அவர்கள் மருந்துப் பொருள்கள் வெளி வருவதற்கு உதவவில்லை என்றால், அமெரிக்காவிற்கு  ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால், நிச்சயமாக இதற்கு  ஒரு பதிலடி இருக்கலாம்” என்று கூறினார். இந்நிலையில் அமெரிக்க அதிபர்  ட்ரம்ப்  முதிர்ச்சியில்லாமல் பேசியுள்ள இந்த பேச்சு  உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் தற்போது உள்ள சூழ்நிலையில், மனிதநேய அடிப்படையில்,  மருந்தை தேவையான அளவு, நம்மை சார்ந்துள்ள அண்டை நாடுகளுக்கு, தேவைப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்குவது என இந்தியா முடிவு செய்துள்ளது. கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகளுக்கு இந்த அத்யாவசிய மருந்தை நாம் வழங்குவோம். இந்த விவகாரத்தில் யூகத்தை கிளப்பவும், அரசியலாக்குவதையும் அனுமதிக்க முடியாது. கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழ்நிலையில், சர்வதேச நாடுகள் வலிமையான ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையை வழங்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Recent Posts

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

7 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

11 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

11 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

12 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

13 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

13 hours ago