ஹேக்கர்களால் முடக்கப்பட்ட இணையதளங்கள் முடக்கப்படுவதை சீரமைக்க நடவடிக்கை …!

Default Image

பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஹேக்கர்களால் முடக்கப்பட்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் இணையதளத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதாக  தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் இணைதளத்திற்குள் ஊடுருவிய ஹேக்கர்கள், சீன எழுத்துகளை அதில் பதிவிட்டு முடக்கினர். எனவே அதனை சீரமைக்கும் பணி நடைபெறுவதாகவும், எதிர்காலத்தில் இது போன்று சைபர் தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளமும் முடக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பாதுகாப்புக்காக அமைச்சகமே செயல்பாட்டை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தொழிலாளர்நலத்துறை அமைச்சகத்தின் இணையதளம் இயங்கவில்லை என்ற போதும், அதற்கான காரணம் வெயிடப்படவில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்