சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா, துணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நேரில் சந்தித்து விளக்கமளிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சி.பி.ஐ துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானாவுக்கும் இடையேயான மோதல்தான் கடந்த ஒரு மாதங்களாக மத்திய அரசு அதிகாரிகள் மத்தியில் தலைப்பு செய்தியாக வலம் வந்துகொண்டிருக்கிறது. இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் சி.பி.ஐ என்ற அமைப்பையே நிலைகுலை வைத்துள்ளது.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் வழக்கு உட்பட முக்கிய வழக்குகளில் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா தலையிடுகிறார்.அந்த வழக்குகளின் விசாரணையை முடக்க அலோக் முயல்கிறார்” எனக் கடந்த மாதம் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியதுடன் மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கடிதமும் எழுதியிருந்தார் துணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா.
இவருடைய கடிதம் தொடர்பாக பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அலோக் வர்மா, அஸ்தானா மீது ஆறு புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகாரில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவும் திசை திருப்பவுமே அவர் என் மீது புகார் கூறுகிறார். அதில் உண்மையில்லை” என கூறினார்.
இந்நிலையில் இறைச்சி ஏற்றுமதி வழக்கில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக அலோக் வர்மா மீதும், ரூ.3 கோடி லஞ்சம் பெற்றதாக அஸ்தானா மீதும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…