ஹாட் டாப்பிக்கான ஊழல் குற்றச்சாட்டு……….கடுப்பான பிரதமர்………நேரில் விளக்கமளிக்க உத்தரவு…!!

Default Image

சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா, துணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக  நேரில் சந்தித்து விளக்கமளிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும்,  சி.பி.ஐ துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானாவுக்கும் இடையேயான மோதல்தான் கடந்த ஒரு மாதங்களாக மத்திய அரசு அதிகாரிகள் மத்தியில் தலைப்பு செய்தியாக வலம் வந்துகொண்டிருக்கிறது. இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் சி.பி.ஐ என்ற அமைப்பையே நிலைகுலை வைத்துள்ளது.
Image result for cbi director alok verma
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் வழக்கு உட்பட முக்கிய வழக்குகளில் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா தலையிடுகிறார்.அந்த வழக்குகளின் விசாரணையை முடக்க அலோக் முயல்கிறார்” எனக் கடந்த மாதம் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியதுடன் மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கடிதமும் எழுதியிருந்தார் துணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா.
இவருடைய கடிதம் தொடர்பாக பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அலோக் வர்மா, அஸ்தானா மீது ஆறு புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகாரில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவும் திசை திருப்பவுமே அவர் என் மீது புகார் கூறுகிறார். அதில் உண்மையில்லை” என கூறினார்.
Image result for cbi director alok verma
இந்நிலையில் இறைச்சி ஏற்றுமதி வழக்கில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக அலோக் வர்மா மீதும், ரூ.3 கோடி லஞ்சம் பெற்றதாக அஸ்தானா மீதும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

Image result for cbi director alok verma

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்