ஹரியானாவில் தென்கொரியப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்!
தென்கொரியப் பெண்ணிடம் ஹரியானா மாநிலம் குர்கானில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குர்கான் அருகே பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தென்கொரியப் பெண்ணும் அவரது நண்பரும் செராவன் ((Sehrawan)) என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த போது 4 பேர் அவரது அனுமதியின்றி அவருடன் செல்ஃபியும் வீடியோவும் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பெண் சண்டையிட்டதையடுத்து அவரிடம் அவர்கள் முறைதவறி நடந்துகொண்டதாகவும், அதனைத் தடுக்க முயன்ற அந்தப் பெண்ணின் நண்பரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.