ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு சுப்ரிம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தமிழக அரசு உத்தரவின்பேரில், மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, வேதாந்தா குழுமம் சார்பில், டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்குள் அதன் நிர்வாகப் பிரிவு அலுவலகம் செயல்படலாம் என்று அனுமதியளித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், அதேநேரத்தில் எந்த விதமான உற்பத்தி பணிகளும் கண்டிப்பாக நடைபெறக் கூடாது என உத்தரவிட்டது.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது.
இந்த குழுவில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். இந்த குழு 2 வாரங்களில் பொறுப்பேற்றுக் கொண்டு, 6 வாரங்களில் ஆய்வுகளை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு சுப்ரிம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க தடைக்கோரிய மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு சுப்ரிம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…