ஷில்லாங்கில் தொடரும் பதற்றம்!1000 துணை ராணுவப் படையினர் குவிப்பு! காவலர்கள் உள்பட 10 பேர் காயம்

Default Image

துணை ராணுவப் படையினர் ஆயிரம் பேரை வடகிழக்கு மாநிலமான மேகாலயா தலைநகர் ஷிலாங்கில் வன்முறையைக் கட்டுப்படுத்த  மத்திய அரசு அனுப்பி உள்ளது. கடந்த வியாழக்கிழமை பேருந்து நடத்துனர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டதை அடுத்து அங்கு இரு பிரிவினர் இடையே மோதல் மூண்டது. அதனைத் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

ஞாயிறன்று நடைபெற்ற மோதலில் காயமடைந்தனர். இயல்பு வாழ்க்கை 4வது நாளாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நகரில் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதி திரும்ப ஒத்துழைக்குமாறு மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ள நிலையில், ஷிலாங்கிற்கு துணை ராணுவப் படையினர் ஆயிரம் பேரை மத்திய அரசு அனுப்பி உள்ளது. சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் சார்பில் உறுப்பினர் ஒருவரும் அங்கு செல்ல இருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்